search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல்காரர்கள் கைது"

    ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.#Customsseized #foreigncurrency
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    இந்த சோதனையில் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். பணத்தை கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் இந்தியா முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆந்திராவில் உள்ள பீமாவரம் பகுதியில் ஒருவரிடமிருந்து இன்று ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #Customsseized #foreigncurrency
    சென்னை விமான நிலையத்தில் அரிய வகை கடல் உயிரினங்களை கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Chennaicustomsaction #Twoarrested
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    இந்த சோதனையில் அரிய வகை கடல் உயிரினங்கள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து 111 கிலோ கிராம் பாங்கோலின் செதில்கள், 160 கிலோ கிராம் உலர்ந்த கடல் குதிரைகள், 180 கிலோ கிராம் குழாய் மீன், 60 கிலோ கிராம் கடல் வெள்ளரி உள்ளிட்ட உயிரினங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.  மொத்தம் 660 கிலோ கிராம் அளவிலான கடல்வாழ் உயிரினங்கள் கைப்பற்றப்பட்டன.



    இந்த கடத்தல் தொடர்பாக சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chennaicustomsaction #Twoarrested
    ×